Posts

என் கருப்பி புள்ள

Image
  சில நினைவுகள் நம்மை விட்டு விலகுவதில்லை விலகி செல்ல நினைத்தாலும் அவை நம்மை துரத்தி கொண்டே இருக்கும்...  எதை நோக்கி பயணித்தாலும் பள்ளிக்கூட நினைவுகள் வந்தவுடன் குழந்தையாக மாறிவிடுகிறோம்...  வளரும் பருவம் சிறகடித்து பறக்க நினைக்கும் வயது பட்டாம்பூச்சியை விரட்டி பிடிக்கும் காலம் அது...  கண்ணாடி போல் கிணறுகளில் நிரம்பி கிடக்கும் தண்ணீரை கண்டால் கிணற்று தவளைகளாய்  துள்ளி குதித்து விளையாட தோன்றும். இந்த பசுமை நிறைந்த நினைவுகளில் நடந்த நிகழ்வு ஒன்று திடீரென உதித்தது. 2001 காலகட்டம் நான் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். சிட்டாய் சிறக்கடிக்க ஆசைப்பட்ட காலமும் அதான். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும் பள்ளிக்கூடம் முடியும் நேரம். அந்த மணி ஓசை டிங் டிங் டிங் என்று எங்கள் காதில் ஒலிக்கிறது....   நரம்பு பைகளை கைகளில்   பிடித்துக்கொண்டு மணியோசை கேட்டதும்  சும்மா சிட்டா வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கிறோம்.  அந்த ஐந்து நாள் பள்ளிக்கு வருகின்ற மகிழ்ச்சியை விட வெள்ளிக்கிழமை சாயங்காலம் 3.59 மணிக்கு அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி எங்கே தேடினாலும் கி...

ஆதலால் காதல் செய்வீர்...

Image
இலக்கணத்தை மீறிய காதல்கள் கவனிக்கப்படுவதும் இல்லை.  காதல் என்பது இளசுகளுக்குள் உதித்து, இளசுகளோடு முடிந்து விடுவதா? காதல் என்பது வயதுகளை மீறிய வசீகரம். வருடங்களுக்குள் அடங்கி விடாத வசந்தம். இளமை காதல் கடலின் அலைகளோடு தொடங்கி அமைதியடைகிறது. முதுமை காதல் மானுடத்தின் மகத்துவமாய் ஒளிர்கிறது. மனதின் வலிமையை கொண்டு உடலின் இயலாமையை நிரப்பி செல்கிறது  முதுமை காதல். இளமையை நேசிக்க தெரிந்தவர்கள் முதுமை காட்டும் அன்பை அகப்படாத விழித்திரையில் பார்க்க முயற்சிப்பதில்லை. காதல் பெரும் நம்பிக்கை கொண்டது.    அன்பை தொலைத்த இடத்தில் நம்பிக்கை பெறுவது இரவில் சூரியனை தேடுவது போல். இல்லாத காதலை இருப்பது போல் நம்புவதும் பெரும் முட்டாள்தனம். உணர்வுகளுக்கு மதிப்பில்லாத பேச்சிலும், புரிதல் இல்லாத இடத்திலும் நம்பிக்கையை மட்டும் அல்ல; காதலை தேடுவதும் தற்கொலைக்கு சமம். உணர்ச்சிகளை கொன்ற பிறகு, கேட்கும் பாவமன்னிப்பு இறந்த உடலை தோண்டி எடுத்து என்ன பலன்.  சிலர் காதல் சொன்ன வார்த்தைகளும், எழுதிய கடிதங்களுமே, காவியாமாய் கரைந்து போகும். சிலர் காதல் நினைவுகளோடு கவிதை பாடும்.  "பார்த்த விழிகள் ...

சொல்ல மறந்த கதை

Image
                                                                       பாகம் -3 “கரைந்து போன கண்ணீரை கடிதங்கள் வழியே அனுப்புகிறேன் கண்ணீரோடு உன்னை வந்து சேரும் எனது காதல் கடிதங்களை முத்தமிட்டு அணைத்து கொள் கண்மணியே” என்றொரு கவிதையை Message மூலமாக கவி எனக்கு   அனுப்பியிருந்தாள். அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து, மறுபடியும் பேச தொடங்கினேன். அப்போது அவளிடம்,  “என்னடி இது எனக்கு புரியலை” என்று கேட்டேன். “சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா அதை பீல் பண்ணு லூசு” என்று ரிப்ளை செய்தாள். “புரிலைன்னு தான் உன்கிட்டே கேட்குறேன் அதை சொல்லேன்” என்றேன். போனை வெறித்தபடி அவளது பதிலுக்காக காத்திருந்தேன். எப்படியும் இரவு 7.40 மணி இருக்கும், கவி எனக்கு Message செய்யாததால் சாப்பிட சென்றேன். சாப்பிடும் நேரத்தில் Pls Wait… என அவளிடம் இருந்து Message வந்தன. நானும் எதுவும் பேசாமல் Hm...

சொல்ல மறந்த கதை பாகம் - 2

Image
கவி... அவள் எனக்கு பரீட்சையமானவள். எப்படி மறப்பேன் அந்த பெயரை... என்னை இயங்க வைத்தவள், ஏங்க வைத்தவள், தவிப்புகளை ரசிக்க வைத்த பெண் அவள். மறக்க முடியாத நினைவுகளாய் இருக்கிறாள் . அந்த பெயரை கேட்டதும் இதயம் அமைதியானது, தூக்கம் கலைந்தவன் போல்,  பெயர் முகம் தெரியாத அந்த பெண்ணிடம் பேச துடிக்கிறேன். நானும் அவளிடம் "பொய் சொல்லாதீங்க, உண்மையாவே உங்க பேரு கவிதானா"... என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அந்த பெண்ணிடம் இருந்து 'ஹலோ.. உண்மையாவே என் பெயர் அதான், உங்களுக்காக எங்க அப்பா அம்மா வைச்ச பேரை மாத்த முடியாது" என்று அனுப்பினாள். அதை படித்து பார்த்து விட்டு வாஞ்சையுடன் வழிந்த முகத்தோடு அந்த பெண்ணுக்கு Message அனுப்பினேன். "சரி.. நான்தான் பேட் பாய்... எனக்கு ஏன், குட் மார்னிங் Message அனுப்புறீங்க".. என்று அனுப்பியதும், அதை படித்து பார்த்தவள் கோபத்துடன் "சரி நான் பேசலை...  குட் பை இனிமே எனக்கு Message பண்ண வேண்டாம்" என்று அனுப்பிவிட்டு போனவள் தான். அதுக்கப்புறம் ஒரு Message கூட வரவில்லை. நானும் அவளுடைய Messageக்காக காத்திருந்து நேரங்கள் வீணானது தான் மிச...

சொல்ல மறந்த கதை

Image
ரொம்ப நாள் கழித்து மீண்டும் எழுத தொடங்கியிருக்கிறேன்.  என் மனதை போட்டு அழுத்தி கொண்டிருந்த கதை, எப்படி தொடங்குவது, எதை சொல்லி புரிய வைப்பது... புள்ளி வைத்து விட்டால் கோலம் போட்டுவிடலாம். அது எட்டு புள்ளி கோலமா, பதினாறு கோலமா என்பதை தீர்மானிப்பது நாம் தான். கேணி வெட்ட தொடங்கி விட்டால் ஆழத்தை பற்றி யோசிக்கக் கூடாது.   மனதில் உள்ள விசயங்களை பளிச் என்று அப்படியே சொல்ல நினைக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ளே ஒரு பைத்தியக்காரன் ஒழிந்திருக்கிறான். அவன் என்ன சொல்ல நினைக்கிறானோ... அதையை பதிவு செய்கிறேன். நீங்களும் படித்து விட்டு கரைந்து செல்லுங்கள். பாரங்களை ஏற்றி கொள்ள வேண்டாம்.  இந்த நாள் என்று சொல்வதை விட வலிகளை தாங்கி கொண்டு சிரித்த முகத்துடன், சிலுவையை சுமக்கும் ஏசுவை போல மறக்கவும் நினைக்கின்ற சுகமான சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறேன்.  2010 இருக்கும் புதுக்கோட்டை மாமன்னர் கலை & அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பை தொடர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பி.ஏ. வரலாறு இரண்டாம் வருட தொடக்கம் ஜூன் மாதம் இருக்கும், நினைக்கிறேன், சரியா ஞாபகம் இல்லை. ஆ...

அப்பாவி பெண் "செடல்"

Image
சாதி, மதம், புராணம், இதிகாசம், சடங்குகளால் இறுகக் கட்டமைக்கப்பட்ட  தமிழ்ச் சமூக வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சிதான் 'செடல்'. இந்த நாவல் முழுக்கவே கடவுள் ஒரு முக்கிய பாத்திரமாக காட்சியளிக்கிறது. புனையப்பட்ட ஒரு சமூகத்தின் ஒழுங்கமைவுக்காகப் பலி கொடுக்கப்படும் பெண்ணை நாவல்  முழுக்கவே கடவுள் பின் தொடர்கிறார்.  செடலும் கடவுள் தன்னுடன் எப்போதும் இருப்பதாகவே நம்புகிறாள் . கடவுளை ஏன் அவள் நம்ப வேண்டும்?அதனால் அவளுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. சிறு வயதிலேயே ஊர் கட்டுப்பாட்டில் பொட்டுக்கட்டி விடப்பட்டு கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். கடவுள் மனித உடலுடன் உறவு வைத்து கொள்வது  சாத்தியமில்லை. கண்களால் காணாத கடவுளை நம்பி ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை கண்டு கோபம் கொள்ளாமல் எதார்த்த வாழ்க்கையோடு பொருந்தி செல்கிறது.  செடலின் குடும்பம் நிலமற்ற கீழ் சாதி வகுப்பினர். உயர்சாதியினர் நிலம் உள்ளவர்கள் நல்ல வசதி வாய்ப்பு படைத்தவர்கள். அவர்களது நிலத்தில் அடிமை வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உயர்சாதியினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு செடலை பொட்டுகட்டி விட அவளது ப...

எங்கள் தோழர் சூர்யா

Image
  நீட் தேர்வு எழுதவிருந்த மூன்று மாணவ, மாணவிகள் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா கலைஞர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை அனைவரது கவனத்தையும் பெற்றது.  நடிகர் சூர்யா, தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். யார் இந்த சூர்யா? சூப்பர்ஸ்டார்களாக திகழும் உட்ச நட்சத்திரங்கள் எல்லாம் நீட் பிரச்னைக்கு குரல் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் சூர்யா மட்டும் குரல் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழலாம்.   நடிகர் சிவக்குமாரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகம் கிடைத்தாலும், சினிமாவில் மிக எளிதில் வெற்றி கிடைத்திடவில்லை. குட்டையானவர், நடனமே ஆட தெரியாது, நடிக்க தெரியலை, வீட்டில் பொழுதுபோகவில்லை என்பதற்காக நடிக்க வருகிறார் என்ற  விமர்சனத்தை, தனது கடின உழைப்பால் மாற்றி காட்டினார். இன்று சூர்யாவிற்காக சமூகவலைதளத்தில் பெரும் குரல் ஒலிக்கிறது. அவருக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக...