சொல்ல மறந்த கதை
பாகம் -3
“கரைந்து போன கண்ணீரை கடிதங்கள் வழியே அனுப்புகிறேன்
கண்ணீரோடு உன்னை வந்து சேரும்
எனது
காதல் கடிதங்களை முத்தமிட்டு
அணைத்து கொள் கண்மணியே” என்றொரு கவிதையை Message மூலமாக கவி எனக்கு அனுப்பியிருந்தாள்.
அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து, மறுபடியும் பேச தொடங்கினேன். அப்போது அவளிடம், “என்னடி இது எனக்கு புரியலை” என்று கேட்டேன். “சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா அதை பீல் பண்ணு லூசு” என்று ரிப்ளை செய்தாள். “புரிலைன்னு தான் உன்கிட்டே கேட்குறேன் அதை சொல்லேன்” என்றேன். போனை வெறித்தபடி அவளது பதிலுக்காக காத்திருந்தேன். எப்படியும் இரவு 7.40 மணி இருக்கும், கவி எனக்கு Message செய்யாததால் சாப்பிட சென்றேன். சாப்பிடும் நேரத்தில் Pls Wait… என அவளிடம் இருந்து Message வந்தன. நானும் எதுவும் பேசாமல் Hmmmm… OK என்று அனுப்பினேன்.
சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல கவிக்கு ‘ஹலோ... செல்லக்குட்டி என்னடி பன்ற இவ்வளவு நேரம்” என்று Message அனுப்பியதும் எந்த லேட் இல்லாம அவள் எனக்கு ரிப்ளை செய்தாள். “உனக்காகதான் வெயிட் பண்ணேன், நீ Message பண்ணுவேன் காத்திருந்தேன் பா… சாப்டியா” என்று கேட்டாள். வழக்கமான சாப்டியா, என்ன சாப்ட இன்னைக்கு என்ன நடந்தது இந்த உரையாடல் முடிந்து அவள் அனுப்பிய கவிதைக்கான கேள்வியை கேட்டேன். அப்போதும் அவள் எனக்கு “Pls.. wait ma intha varen” Message அனுப்பினாள். எனக்கு கோபம் வரலை ஆனால், நக்கலான சிரிப்புடன், ஒரு கவிதைக்கு இவ பன்றது இருக்கே தாங்க முடியலை என்று மனதிற்குள் நினைத்தேன். காலைல போனில் சவுண்ட் இருக்கும் நைட் ஆனா, Message வந்தா ஊரே எழுப்புற சத்தத்தை குறைத்து, சைலண்ட் மோடில் வைத்திருந்தேன். கொஞ்சம் நேரம் பசங்க கிட்ட போனில் பேசினாலே யாரு, ஏன் எதுக்கு இந்த நேரத்துல பேசுற டெய்லியும் காலேஜ்ல பாக்குற அப்புறம் என்னடா போன்ல நொட்டுற தமிழ் வார்த்தைகளை அம்மா அள்ளி தெளிப்பாங்க. 10 நிமிடம் கழித்து அவளிடம் இருந்து Message வந்தது. நான் கோவத்துல இவ்வளவு நேரமா என்று கேட்டேன். அவள் பதிலாக ஒரு கடிதத்தில் இருந்த வார்த்தைகளை டைப் செய்து Message மூலம் மொத்தமாக அனுப்பினாள்.
இதை பார்த்தா ஒரு ராமாயணம் கதையே எடுக்கலாம். நானும் போன் பட்டனை கீழே நகர்த்தி பாக்குறேன் ரொம்ப பெரிய Message வேற. அடுத்து அவள் அனுப்பிய Message-ல் “இது என் மாமா என் அக்காவுக்கு அனுப்பிய கடிதம். இப்போ, அவர் வெளிநாட்டுல இருக்காரு. எங்க மாமா ஞாபகம் வந்ததுன்னா என் அக்கா இந்த கடிதத்தை படிச்சு பார்த்து ஆறுதல் அடையும்னு என்கிட்ட பலமுறை பேசியிருக்கு தெரியுமா” என்று அனுப்பியிருந்தாள்.
நானும்
விளையாட்டா “இப்ப யாருடி கடிதம் எழுதுறா” என்று கேட்டேன். அதற்கு அவள், “நீ சொன்னா
நம்ப மாட்ட… என் அக்காவும் மாமாவும், லவ் மேரேஜ்… ஆனால் அவங்க காதலிக்கும் போது, நேர்ல பார்த்து, சிரித்து கைப்பிடித்து, கன்னத்தில்
முத்தமிட்டு.. விடிய விடிய பேசுனதில்லை… எல்லாமே கடிதம் மூலம் தான்… எங்க அக்கா அடிக்கடி
என்கிட்ட சொல்லும்… என்னதான் உங்க மாமனை நேர்ல பார்த்து ரசிச்சாலும், எனக்காகேவே அவர்
எழுதுன காதல் கடிதத்தை யாருக்கும் தெரியக் கூடாதுன்னு, என் தோழி அட்ரஸ்ல அனுப்பிட்டு,
என்னோட பதிலுக்காக காத்திருப்பாரு… அந்த அழகான காதலையும், கடிதத்தால் எழுப்பிய மனக்
கோட்டைகளை இப்பவும் நினைச்சா பிரமிப்பா இருக்குடின்னு சொல்லிருக்காங்க” என்று எனக்கு
அனுப்பினாள். நான் அந்த Message படிச்சு பார்த்துட்டு சொல்ல வார்த்தைகளே இல்லாமல்,
கவிக்கு ரிப்ளை செய்தேன்.
“நிஜமாவே
நம்ப முடியலைப்பா… சான்ஷே இல்லை.. எனக்கு அவங்களை நேர்ல பாக்கனும்னு சொன்னேன்”. அதுக்கு
அவள் “பாக்கலாம்… பாக்கலாம்”… என்று ரிப்ளை செய்தாள். அதன் பிறகு அவள் அனுப்பிய குறுஞ்செய்தியில்,
“என் அக்காவும், மாமாவும் ரொம்ப பாவம் தெரியுமா… எங்க மாமாகிட்ட பணம் இல்லாததால எங்க
அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. எங்க அக்கா அழுது கெஞ்சி பார்த்தும்… அப்பா ஒரு
வார்த்தை கூட கேட்காம, வேற மாப்பிளையை பாத்துட்டாரு. அப்புறம் எங்க அக்கா, வீட்டை விட்டு
போயி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா… இதனால சொந்தக்காரங்க எங்களை ரொம்ப அசிங்கமா
பேசுனாங்க… அப்பாவும் ரொம்ப பீல் பண்ணாரு… என் அக்கா வீட்டை விட்டு போயி 2 வருஷம்
ஆச்சு… இதுவரைக்கும் வீட்டுக்கு வரலை… ஆனால், வீட்டுக்கு தெரியாம நான் பாக்க போவேன்,
அப்போ இந்த கடிதத்தை பார்த்தப்போ ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு… அடிக்கடி சொல்லுவா
பணம் தாண்டி எல்லாம், பணம் இருந்தா நாம எது பண்ணாலும் சரின்னு சொல்லுவாங்க”… என்று
கூறி கவி ரொம்பவே கவலைப்பட்டாள்.
நானும்
அவளை Message மூலமா தேற்றினேன். “அவளும் ஏய்… நா அழுகலைப்பா… பேசாம நாமலும் இதே மாதிரி
கடிதம் எழுதலாமா” என கேட்டாள். நான் என்ன சொல்வது. இருந்தாலும் மனசு கேட்கவில்லை சொல்லிவிட்டேன்.
“ஏற்கனவே நாம கடிதம் எழுதாத ஒரு காதல் கதையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்ப
வரைக்கும் நீ யார்னு எனக்கு தெரியாது, நான் யார்னு உனக்கு தெரியாது… இந்த 20ம் நூற்றாண்டில்
நேரில் பாக்காம போன் மூலமா ஒரு காதல் கதைனு சொன்னா யார் நம்புவா; நீயே சொல்லு” என்றேன்.
அவளும் பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள், “புரியுது மா… வெரி சாரி” என்றாள். நானும்
அவளிடம் இதுக்கெல்லாம் எதுக்கு சாரி…” என்று கேட்டேன். மறுபடியும் காதல் கடிதத்தை பற்றி பேச தொடங்கினாள்.
அவள் சொல்ல சொல்ல என் உதடுகள் அசைபோட தொடங்கிவிட்டன. அவள் எழுதும் வார்த்தைகளை
படித்து பார்த்து மலைத்து போனேன்… அந்த இரவுகளை அழகாக்கினாள்… யாதுமாகிய அவள், காதலையும்,
காதலோடு உறவாடிய கவிதைகளை நேசிக்க வைத்தாள் என் கவி.
அவள்
அனுப்பிய குறுஞ்செய்தியில், “உன்கிட்ட என்னோட காதலை சொல்ல முடியாம தவிக்கிறேன் மாமா… இந்த உலகம் அழிஞ்சுது
நினைச்சுக்கோ… நீயும், நானும் மட்டும் தான் இருக்கோம். இது கனவா, நிஜமான்னு சொல்ல
தெரியலை… நான் எழுதுற ஒவ்வொரு வார்த்தையிலும் நீதான் இருக்க… நான் உன்னை உச்சரித்துகொண்டே
இருக்கேன்… உன் பெயரை விட ஒரு அழகான உலகம் எதுன்னு எனக்கு தெரியலை… உனக்கு தெரியுமா… உருவமில்லாத
கண்ணாடியில் நீதான் எனக்கு அழகா தெரியுற, உன்னை பத்தி நினைச்சாலே நான் பைத்தியம் ஆகிடுறேன்.
கடிதத்தின் வழியாக நீ அனுப்பிய முத்தங்களை பெற்று கொண்டேன். தலையணையில் தூங்கி ரொம்ப
நாள் ஆச்சு… உன் கடிதம் எனக்கு பஞ்சு மெத்தையாகி விட்டது. கனவில் குறும்பு செய்யும்
என் அன்பு காதலா… உனக்காக ஏங்கி தவிக்கிறேன்… ஏய் அழகா… என்னை நீ ரொம்பவே வெட்கப்பட
வைக்கிறடா… இப்படியெல்லாம் உனக்கு கடிதம் எழுத ஆசை எருமை, ஏன் மாமா புரிஞ்சுக்க மாட்டேங்குற”
என திட்டுற மாதிரியான பொம்மையை Message மூலம் அனுப்பியிருந்தாள்.
நான்
வானத்தை பார்த்து அவளது முகத்தை இரவில் வரைகிறேன். அவள் இப்படித்தான் இருப்பாள் என்ற
ஏக்கத்தோடு, மனம் தவியாய் தவித்தது. மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அவள் அனுப்பினாள்.
அதில், “எனக்கு ரொம்ப ஆசைப்பா கடிதம் எழுத…
நான் யாருக்கும் காதல் கடிதம் எழுதுனதில்லை… என் மனசுக்குள்ள இருக்குறதை உன்கிட்ட கொட்டி
தீக்கனும்… இந்த போன் என்னோட கனவுகளை நிறைவேத்துமான்னு தெரியலை… எதுக்கு பேசுறோம்,
ஏன் சண்டை வருது, எதுவும் புரியலை… நான் உனக்காக கடிதம் எழுதும்போது என்னையே உனக்கு
தந்துடுவேன்… அதுல நீ மட்டும் தான் இருப்ப… ஒரு நிமிசத்துல உன்னோட பதிலை தெரிஞ்சுக்குறதை
விட, மூன்று நாள், இல்லைனா ஒரு வாரம், 10 நாள் கூட ஆனாலும், அந்த கடிதத்துல நீ தரும்
அன்பை மிகைப்படுத்தி பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். நமக்குள்ள இருக்குற இடைவெளியை
காதலோடு அணுக தபால்காரருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். அந்த கடிதத்தை படிச்சு, படிச்சு…
நான் மெழுகுவர்த்தியா உருகனும்… உன்னோட பதில் கடிதத்துக்காக வீட்டு வாசலில் காத்திருக்கனும்…
உன் கடிதத்தை என் நெஞ்சோடு அணைத்து, முத்தம் கொடுத்து, யாருக்கும் தெரியாத இரவில்
படித்து சந்தோஷப்படனும். எனக்காக நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் மனப்பாடமா என்
மனசுல பதியனும்… ஒரு தலைவன், தலைவியை போல வாழனும் மாமா… எனக்காக ஒரே ஒரு கடிதம் எழுது
ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
அடம்பிடிக்கும் குழந்தையிடம் மாட்டி கொண்டது போல் என் மனம் அவளது உணர்வுகளை நேசிக்க தொடங்கியது. புதிய கான்சப்ட் எதுவும் இல்லை… ரொம்ப பழசு தான், ஆனால் கவி அதை வெளிப்படுத்திய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. கண்களை பார்த்து காதலிக்காத நாங்கள், எப்படி காதல் கடிதம் எழுதுவோம். அப்போது காதல் கோட்டை படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அதே காலகட்டத்தில் சேரன் நடித்த “பொக்கிஷம்” படம், வெளியாகியிருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற “நிலா.. நீ வானம் காற்று” பாடல் இபபோதும் என்னுடைய ஆல்டைம் பேவரைட்டாக மாறியது. எனக்கு கடிதம் எழுதி பழக்கம் இல்லை, அவளுக்காக முதல் முறையாக ஒரு காதல் கடிதம் எழுத ஆசைப்பட்டேன். வார்த்தைகளால் எனது உணர்வுகளையும், உண்மைகளையும், பொய் இல்லாமல் எழுத கடமைப்பட்டிருந்தேன். அந்த இரவுகள் கழிந்து, பல இரவுகள் போனில் Message மூலம் காதலிப்பதை நாங்கள் தவிர்த்தோம்.
அவள்
சொன்ன வார்த்தைகள் மெய் ஆனது. அவளுக்காக வாசலில் காத்திருக்க தொடங்கினேன். 10 நாள்
ஒருமுறை எழுதப்பட்ட காதல் கடிதங்கள், வாரம் இருமுறை அனுப்பி கொண்டோம். அவளது தோழி
கடவுள் ஆனாள். இருவருக்குள் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. காதலுக்கு கண்கள்
இல்லை, கடிதங்களை தூது அனுப்பினோம். அவள் பேசிய வார்த்தைகளுக்கு பிறகு என் அப்பா,
அம்மாவுக்கு எழுதிய கடிதங்களை படித்து பார்த்தேன்… இந்த உலகமே இருட்டானது போல் உணர்ந்தேன்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை படிப்பறிவு இல்லாத என் அம்மா, யாரோ ஒருவரிடம் தனது வலிகளை
சொல்லி வார்த்தைகள் மூலம் தூது அனுப்பினாள். எனது அப்பாவும் அந்த கடிதத்தை படித்துவிட்டு,
அம்மாவை தேற்றிய காதல் வார்த்தைகள் இன்னும் என் காதுக்குள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
கடிதங்களை நேசிக்க தொடங்கிய பிறகு, பல மடல்கள் எண்ணிடம் குவிந்து கிடக்கிறது.
வெற்று
வார்த்தைகளால் நிரப்ப முடியாத பொக்கிஷத்தை தந்தவள் கவிதான்.
தொடரும்
Comments
Post a Comment