எங்கள் தோழர் சூர்யா

 


நீட் தேர்வு எழுதவிருந்த மூன்று மாணவ, மாணவிகள் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா கலைஞர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை அனைவரது கவனத்தையும் பெற்றது.

 நடிகர் சூர்யா, தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். யார் இந்த சூர்யா? சூப்பர்ஸ்டார்களாக திகழும் உட்ச நட்சத்திரங்கள் எல்லாம் நீட் பிரச்னைக்கு குரல் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் சூர்யா மட்டும் குரல் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழலாம்.  

நடிகர் சிவக்குமாரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகம் கிடைத்தாலும், சினிமாவில் மிக எளிதில் வெற்றி கிடைத்திடவில்லை. குட்டையானவர், நடனமே ஆட தெரியாது, நடிக்க தெரியலை, வீட்டில் பொழுதுபோகவில்லை என்பதற்காக நடிக்க வருகிறார் என்ற  விமர்சனத்தை, தனது கடின உழைப்பால் மாற்றி காட்டினார். இன்று சூர்யாவிற்காக சமூகவலைதளத்தில் பெரும் குரல் ஒலிக்கிறது. அவருக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு தோழர்கள் பலரும்  ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். 

உண்மையான ஹூரோ யார்? என்ற கேள்விக்கு சூர்யாவே பதிலாக இருக்கிறார். சூர்யாவின் கேள்விகள் யாருக்கு எதிராக இருக்கிறது என்பதை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், பெரும்பான்மை தமிழர்களின் குரலாய் இருக்கிறது. சூர்யா கூறியதில் எந்த தவறும் இல்லை. பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களே வீட்டிலிருந்தே பணியை தொடர்கிறார்கள். மாணவர்களை மட்டும் நீட் தேர்வெழுத சொல்வது எந்த விதத்தில் நியாயம். மக்கள் மதிக்கும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக  ஹைகோர்ட்டாவது ம...வது என்று  எச்.ராஜா கூறியபோது வராத கோபம் சூர்யா கேள்வி கேட்டதும் கோபம் வருகிறது. 

நமது பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள எல்லாவற்றையும் ஆரிய பார்ப்பனியம் தனது ஆதிக்கத்திற்கேற்ப கட்டமைக்கிறது. துரோணர்கள் ஏகலைவர்களின் கட்டை விரல்களுக்காய் வெறிநாய்போல் திரிகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக கல்வி வழியாக நீட் தேர்வின் மூலம் நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது. இதனால் கிறமாப்புற ஏழை மாணவர்களின் கனவு நசுக்கப்படுகின்றன. மாநில தேர்வு பட்டியலில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இதைவிட நல்ல தகுதி தேர்வு எதற்கு என்ற கேள்வியைத்தான் சூர்யா கேட்டுள்ளார்.

Add caption

சூர்யாவின் கருத்தாக்கத்தை தனியொரு மனிதரின் குரலாக பார்க்கவில்லை தமிழ்நாட்டு மக்களின் குரலாக பார்க்கிறோம். மருத்துவரானால் பல உயிர்களை காப்பாற்றலாம் என்று இருந்த நிலையை, தற்போது மருத்துவம் படிக்க ஆசைப்பட்டாலே பலியாகிவிடுவமோ என்ற பயத்தை உருவாக்கிவிட்டது நீட் தேர்வு. மனுநீதி வழியாக வந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு தேவையில்லை, நீட்' தேர்வின் கொடுமையால் எத்தனையோ மாணவ, மாணவிகளின் உயிர்ப் பலி வாங்கப் பட்டு விட்ட நிலையில், மனிதாபிமானமும், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அதனை ரத்து செய்யவேண்டும் என்ற எதிரொலிப்புதான் நடிகர் சூர்யாவின் கருத்தாக உள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் திமுகவின் பலம் அவர்களுக்கே தெரியாமல் சிலர் சூர்யாவை எதிர்ப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. சூர்யாவின் மீது பாய்வார்கள் என எதிர்பார்க்கபட்ட சங்கிகள் அமைதியாக இருப்பதும், எதிர்பாராத திமுகவினர் சூர்யாவின் சந்தேகம் கிளப்புவதும். காலத்தின் கொடுமை. நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டவர் அதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை எதிர்த்து பேசுகிறார். 

பாஜக கூட்டணியில் இருந்த திமுக தவறு என்று தெரிந்த பின் விலகவில்லையா நியாயங்கள் திமுகவிற்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.  நீட் தேர்வால் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை. சூர்யாவிற்கு மட்டுமல்ல நாமும் கை கோர்த்து நிற்போம்.   

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என்பதும் பின்பு சிஸ்டம் சரியில்லை, இளைஞர்களிடம் எழுச்சி வந்தால் தான் அரசியலுக்கு வருவேன்" என்று வாயால் வடை சுடுவதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மற்றொருவர் பிக்பாஸில் மட்டும் புரட்சி செய்து பாஜகவை அடியோடு ஒ(ளி)லிக்க பாடுபடுகிறார். இந்த நடிகர்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்னைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று தோள் கொடுக்கும் தோழர் சூர்யாவை ஆதரிப்போம்.

இதிலும் சிலர்  நீட் தேர்வை மறந்து சூர்யாவை புகழ்வதாக தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு என்னும் பார்ப்பனிய ஆயுதம் சூர்யாவின் வீட்டை தாக்க தொடங்கியிருக்கும், தீவிரவாதி பட்டம் கொடுக்கும், அவரது உருவத்தை கேலி செய்வார்கள், மனைவியை வைவார்கள், ஆரன் வைத்த வண்டிகள் வருமான வரித்துறை மூலம் சிக்கலை தருவார்கள், அவர் நடித்த படத்தை வெளியிட தடை விதிப்பார்கள் இதையெல்லாம் தெரிந்துதான் அவர் நீட் தேர்வுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார். தான் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை என்ற உறுதியோடு உள்ளார். 

இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் வேறு உள்ளன. அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் தீபக் குப்தா கூறியதாவது, "எந்த சமூகம் கேள்வி கேட்க அனுமதிக்கிறதோ அந்த சமூகம் தேர்ச்சி அடையும். விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் முடக்கிவிட்டால் ஜனநாயகம் செயலற்றுப் போகும். கேள்வி கேட்பது அனைத்து குடிமக்களின் உரிமை" என்கிறார். நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியத்திற்கு எச்.ராஜா, எஸ்.வி.சேகர் பேசியது தவறாக தெரிவதில்லை. சூர்யாவிற்கும் இவர்களுக்கும் நூ(ல்) அளவு வித்தியாசம் இருப்பதே அவரது பதட்டம் புரியவைக்கிறது. 

நடிகர் சூர்யாவை ஆதரிக்க கல்வி மட்டுமே காரணியாக இருக்கிறது. கல்வி ஒருவனை உயர்த்தும், ஒருபோதும் அவனை உயர்த்தும் ஏணியாகவே உள்ளது. அந்த வகையில் பலரது வாழ்விற்கு சூர்யா ஏணியாகவே உள்ளார். தோழன், அண்ணன், தந்தை, ஆசானாகவும் இருப்பது தமிழ்ச்சமூகம் கண்டெடுத்த மாபெரும் கனவுகளின் நாயகன் சூர்யா. 

கடந்த ஜனவரி 17ஆம் தேதி அவர் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டுவிழாவில் சூர்யா பேசியதாவது, "நகரத்தில் படித்து வளர்ந்த உங்களுக்கு,  கிராமத்தில் வளரும் குழந்தைகளின் வலி எப்படி புரியும், அதை எவ்வாறு உணர்வீர்கள் என்று கேட்பார்கள். இதற்கு என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சிறுவயதில் நான் வளர்ந்த கவுண்டம்பாளையத்தையும், சூலூரையும், கீழம்பாடியையும் நாங்கள் மறக்கவில்லை. அதுதான் எங்கள் வேர், அடையாளம், அங்கிருந்துதான் வந்திருக்கோம். சென்னையில்தான் படிச்சேன்,  கார் இருந்தது ட்யூசன் டீச்சர் இருந்தாங்க, அனைத்து வசதியும் இருந்தது என்னால் நல்ல மார்க் எடுக்க முடியலை. எல்லா வசதிகளும் கிடைத்தும் ரொம்ப பிரமாதமா படிக்கலை, நானும் பின்தங்கிய நிலையில் படித்த மாணவன்தான். நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் எந்த தகுதியே இல்லாத ஒருத்தனை நடிகன் ஆக்கியது நீங்கதான். 

நீங்க சூர்யா என்ற அடையாளம் கொடுத்தீர்கள். அந்த அடையாளத்திற்கு எங்களால் முடிந்தது தான் அகரம் அறக்கட்டளை. இதனால், மூவாயிரம் தம்பி, தங்கைகளின் வாழ்க்கையை கொஞ்சம் புரட்டி போட முடிந்தது. அகரம் பெரிய குடும்பம் அதில் நான் மட்டும் அடையாளம் அல்ல" என்று குறிப்பிடுவார். அவர் கூறியதை போல அகரம் அவருக்கு மட்டும் அல்ல பல மாணவர்களின் அடையாளமாக உள்ளது. 

சூர்யாவை எதிர்ப்பவர்களை சனாதனவாதியாகத்தான் நாங்கள் பார்ப்போம். சூர்யா எங்கள் தோழன். நான் சூர்யாவோடு நிற்கிறேன் நீங்களும் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். #Istandwithsurya

Comments

Post a Comment

Popular posts from this blog

சொல்ல மறந்த கதை