சொல்ல மறந்த கதை
பாகம் -3 “கரைந்து போன கண்ணீரை கடிதங்கள் வழியே அனுப்புகிறேன் கண்ணீரோடு உன்னை வந்து சேரும் எனது காதல் கடிதங்களை முத்தமிட்டு அணைத்து கொள் கண்மணியே” என்றொரு கவிதையை Message மூலமாக கவி எனக்கு அனுப்பியிருந்தாள். அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து, மறுபடியும் பேச தொடங்கினேன். அப்போது அவளிடம், “என்னடி இது எனக்கு புரியலை” என்று கேட்டேன். “சொன்னா மட்டும் புரிஞ்சிடுமா அதை பீல் பண்ணு லூசு” என்று ரிப்ளை செய்தாள். “புரிலைன்னு தான் உன்கிட்டே கேட்குறேன் அதை சொல்லேன்” என்றேன். போனை வெறித்தபடி அவளது பதிலுக்காக காத்திருந்தேன். எப்படியும் இரவு 7.40 மணி இருக்கும், கவி எனக்கு Message செய்யாததால் சாப்பிட சென்றேன். சாப்பிடும் நேரத்தில் Pls Wait… என அவளிடம் இருந்து Message வந்தன. நானும் எதுவும் பேசாமல் Hm...