என் கருப்பி புள்ள
சில நினைவுகள் நம்மை விட்டு விலகுவதில்லை விலகி செல்ல நினைத்தாலும் அவை நம்மை துரத்தி கொண்டே இருக்கும்... எதை நோக்கி பயணித்தாலும் பள்ளிக்கூட நினைவுகள் வந்தவுடன் குழந்தையாக மாறிவிடுகிறோம்... வளரும் பருவம் சிறகடித்து பறக்க நினைக்கும் வயது பட்டாம்பூச்சியை விரட்டி பிடிக்கும் காலம் அது... கண்ணாடி போல் கிணறுகளில் நிரம்பி கிடக்கும் தண்ணீரை கண்டால் கிணற்று தவளைகளாய் துள்ளி குதித்து விளையாட தோன்றும். இந்த பசுமை நிறைந்த நினைவுகளில் நடந்த நிகழ்வு ஒன்று திடீரென உதித்தது. 2001 காலகட்டம் நான் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். சிட்டாய் சிறக்கடிக்க ஆசைப்பட்ட காலமும் அதான். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும் பள்ளிக்கூடம் முடியும் நேரம். அந்த மணி ஓசை டிங் டிங் டிங் என்று எங்கள் காதில் ஒலிக்கிறது.... நரம்பு பைகளை கைகளில் பிடித்துக்கொண்டு மணியோசை கேட்டதும் சும்மா சிட்டா வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கிறோம். அந்த ஐந்து நாள் பள்ளிக்கு வருகின்ற மகிழ்ச்சியை விட வெள்ளிக்கிழமை சாயங்காலம் 3.59 மணிக்கு அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி எங்கே தேடினாலும் கி...