சொல்ல மறந்த கதை
ரொம்ப நாள் கழித்து மீண்டும் எழுத தொடங்கியிருக்கிறேன். என் மனதை போட்டு அழுத்தி கொண்டிருந்த கதை, எப்படி தொடங்குவது, எதை சொல்லி புரிய வைப்பது... புள்ளி வைத்து விட்டால் கோலம் போட்டுவிடலாம். அது எட்டு புள்ளி கோலமா, பதினாறு கோலமா என்பதை தீர்மானிப்பது நாம் தான். கேணி வெட்ட தொடங்கி விட்டால் ஆழத்தை பற்றி யோசிக்கக் கூடாது. மனதில் உள்ள விசயங்களை பளிச் என்று அப்படியே சொல்ல நினைக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ளே ஒரு பைத்தியக்காரன் ஒழிந்திருக்கிறான். அவன் என்ன சொல்ல நினைக்கிறானோ... அதையை பதிவு செய்கிறேன். நீங்களும் படித்து விட்டு கரைந்து செல்லுங்கள். பாரங்களை ஏற்றி கொள்ள வேண்டாம். இந்த நாள் என்று சொல்வதை விட வலிகளை தாங்கி கொண்டு சிரித்த முகத்துடன், சிலுவையை சுமக்கும் ஏசுவை போல மறக்கவும் நினைக்கின்ற சுகமான சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறேன். 2010 இருக்கும் புதுக்கோட்டை மாமன்னர் கலை & அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பை தொடர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பி.ஏ. வரலாறு இரண்டாம் வருட தொடக்கம் ஜூன் மாதம் இருக்கும், நினைக்கிறேன், சரியா ஞாபகம் இல்லை. ஆ...