எங்கள் தோழர் சூர்யா
நீட் தேர்வு எழுதவிருந்த மூன்று மாணவ, மாணவிகள் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா கலைஞர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை அனைவரது கவனத்தையும் பெற்றது. நடிகர் சூர்யா, தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். யார் இந்த சூர்யா? சூப்பர்ஸ்டார்களாக திகழும் உட்ச நட்சத்திரங்கள் எல்லாம் நீட் பிரச்னைக்கு குரல் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் சூர்யா மட்டும் குரல் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழலாம். நடிகர் சிவக்குமாரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகம் கிடைத்தாலும், சினிமாவில் மிக எளிதில் வெற்றி கிடைத்திடவில்லை. குட்டையானவர், நடனமே ஆட தெரியாது, நடிக்க தெரியலை, வீட்டில் பொழுதுபோகவில்லை என்பதற்காக நடிக்க வருகிறார் என்ற விமர்சனத்தை, தனது கடின உழைப்பால் மாற்றி காட்டினார். இன்று சூர்யாவிற்காக சமூகவலைதளத்தில் பெரும் குரல் ஒலிக்கிறது. அவருக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக...